மைத்திரி குறித்து கவலை வெளியிட்டுள்ள தயாசிறி!
சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக செயல்படுவதற்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பில் தான் வருந்துவதாக கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தான் கட்சியின் பொதுச்செயளாலராக தொடர்ந்தும் செயல்பட்டிருந்தால் இன்று மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என கொழும்பு ஊடகமொன்றுடனான சிறப்பு நேர்காணலின் போது அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் முரண்பாடுகள்
சிறிலங்கா சுதந்திர கட்சிக்குள் அரசியல் ரீதியில் பல முரண்பாடுகள் காணப்பட்டதாக தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் பதவிகளிலிருந்து அண்மையில் சில தரப்பினர் நீக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் தான் ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் நிலை
அத்துடன், கட்சியின் தற்போதைய நிலைக்கு கட்சி தலைவராக செயல்பட்ட மைத்திரிபால சிறிசேன மற்றும் சில தீர்மானங்களை அவர் மேற்கொள்வதற்கு காரணமாக இருந்த தரப்பினர் பொறுப்பேற்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியின் தலைவராக செயல்படுவதற்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு தடை விதிக்கப்பட்டாலும், தனக்கு தற்போதைய நிலையில் தலைவர் பொறுப்பேற்க வேண்டுமென்ற ஆசை இல்லை என தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |