இலங்கை அதிபர் தேர்தல் தொடர்பில் அலி சப்ரி வெளியிட்டுள்ள தகவல்
Ali Sabry
Election
Sri Lanka Presidential Election 2024
By Shadhu Shanker
இலங்கை (Sri Lanka) அதிபர் தேர்தலானது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் அல்லது 12ஆம் திகதிகளில் நடைபெற சாத்தியம் உள்ளதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் அதிபர் தேர்தல் தொடர்பிலான சபை ஒத்தி வைப்பு விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “அதிபர் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு எவ்வித காரணங்களும் கிடையாது மக்களின் ஆணை தேர்தல்களின் போது பயன்படுத்தப்பட வேண்டும்.
அதிபர் தேர்தல்
இலங்கை அதிபர் பதவி காலத்தை நீடிக்க முடியாது. 1982ம் ஆண்டை தவிர நாட்டை ஆட்சி செய்தல் தொடர்பிலான தேர்தல்கள் உரிய காலங்களில் நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபரின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகள் அதனை குறைக்கவோ அதிகரிக்கவோ முடியாது” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 15 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்