தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க முயற்சி : அரசியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டு
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சிதறடிக்கப்படும் வாக்குகளை பொது வேட்பாளருக்காக திரட்ட வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள பொதுக் கட்டமைப்பின் முதலாவது கூட்டம் யாழிலுள்ள (Jaffna) தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (28) இடம்பெற்றது.
இக் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
பொது வேட்பாளர்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “எல்லோரும் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க பார்க்கின்றார்கள். தமிழ் மக்களை ஒன்றாக திரட்டுவது தான் எங்களுடைய நோக்கம்.
அவ்வாறு சிதறடிக்கப்படும் வாக்குகளை பொது வேட்பாளருக்கு நாங்கள் திரட்ட தவறினால் அடுத்து அடுத்து நடக்கக்கூடிய எல்லா தேர்தல்களிலும் தமிழ் மக்களின் அனைத்து வாக்குகளும் மேலும் சிதறடிக்கப்படும்.
எனவே தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படுவதில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாத்து தமிழ் மக்களை திரண்ட சக்தியாக மாற்றுவது தான் எங்களது நோக்கம்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |