பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்
இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போர், சட்டம் ஒழுங்கைப் புறக்கணித்து ஆத்திரமூட்டும் மற்றும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
அத்துடன், சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் உறுதியுடன் இருக்கும் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் பணிகளுக்கு ஆர்ப்பாட்டகாரர்கள் இடையூறு விளைவிப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியையும், அமைதியின்மையையும் சமாளிக்க மிகுந்த புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் பொதுமக்கள் உதவ வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமைதியான முறையில் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் மக்களின் ஜனநாயக உரிமையை அனைத்து தனிநபர்களும் மதிக்கின்றனர் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அமைதியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலைமை மாறி, மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, பொது அமைதியைப் பேணுவதற்கும், மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும், சமூக ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், அரசியலமைப்பின் விதிகளுக்கு இணங்க அரச தலைவரால் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
