பசில் ராஜபக்சவை கைது செய்ய அதிரடி உத்தரவு - INTERPOLசிவப்பு பிடியாணை

Basil Rajapaksa Mahinda Rajapaksa Rajapaksa Family
By Thulsi Oct 14, 2026 05:23 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பசில் ராஜபக்சவைக் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்குச் சொந்தமான நிதிகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இரத்து செய்யப்பட்டது அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை

இரத்து செய்யப்பட்டது அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை

சட்டவிரோத சொத்துக்கள்

அத்துடன், சர்வதேச காவல்துறையின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்காக, சிவப்பு அறிவித்தலைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பிடியாணையைப் பிறப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பசில் ராஜபக்சவை கைது செய்ய அதிரடி உத்தரவு - INTERPOLசிவப்பு பிடியாணை | Sl Pursues Interpol Action Against Basil Rajapaksa

2014-ஆம் ஆண்டில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 7.8 மில்லியன், அப்பணியகத்தின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

குறித்த நிதி பயன்பாடு தொடர்பான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பற்றி எரிய ஆரம்பிக்கும் மத்திய கிழக்கு - எரிபொருள் நிலையங்கள் மீது கடும் வான்வழித் தாக்குதல்

மீண்டும் பற்றி எரிய ஆரம்பிக்கும் மத்திய கிழக்கு - எரிபொருள் நிலையங்கள் மீது கடும் வான்வழித் தாக்குதல்

ஞானசார தேரர் காவியுடை களையப்படும் காட்சி நேரலையில்..! வெடித்த சர்ச்சை - பற்ற வைத்த உதய கம்மன்பில

ஞானசார தேரர் காவியுடை களையப்படும் காட்சி நேரலையில்..! வெடித்த சர்ச்சை - பற்ற வைத்த உதய கம்மன்பில

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026