துருக்கிக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் - ரணில் விக்ரமசிங்க
துருக்கிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க சிறிலங்கா அரசாங்கம் தயாராக இருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க இதனை துருக்கி அதிபர் தையிப் எர்டோகனுக்கு தெரிவித்துள்ளதாக வெளிவிகார அமைச்சு கூறியுள்ளது.
இலங்கையர்களின் பாதுகாப்பு
துருக்கியில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சிறிலங்கா அரசாங்கம் ஆயத்தமாக இருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
துருக்கியில் உள்ள 15 இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அங்குள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றதென வெளிவிகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை பெண்மணியின் உடல் அண்டக்யா பகுதியில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
