அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் : அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
இந்தியாவின் அதானி (Adani) குழுமத்துடனான மின்சார கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு செய்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதானி குழுமத்துடனான மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை இலங்கை இரத்து செய்துள்ளதாக எக்கனொமிக் டைம்ஸ் செய்திகளை (Economic Times) மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்து வெளியிட்ட அமைச்சர்
இந்த நிலையில் இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸவிடம் (Nalinda Jayatissa) ஊடகம் ஒன்று வினவியபோது, குறித்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த ஒப்பந்தம் தொடர்பில் தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கைக்கும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கும் இடையில், 20 வருட மின்சார கொள்முதல் ஒப்பந்தமொன்று கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |