சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை...!
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம்
கடந்த மாதம் 25 ஆம் திகதி கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சனத் நிஷாந்தவின் வாகனம், விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
நீதிமன்ற உத்தரவு
இதனைத் தொடர்ந்து, குறித்த வாகனத்தை செலுத்திய அவரது சாரதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சாரதி, இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவரை பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        