மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிரான தொடர் விசாரணை : சிறிதரன் விசனம்

S. Sritharan Sri Lanka
By Beulah Oct 19, 2023 01:21 AM GMT
Report

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (18) இடம்பெற்ற நீதித்துறைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தான்..! ஐ.நா தூதர் குற்றச்சாட்டு

காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தான்..! ஐ.நா தூதர் குற்றச்சாட்டு

நீதி இயங்காத நாடாகவே இலங்கை

“நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டில் நீதி உள்ளதா, நீதிமன்றங்களின் கட்டளைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா, நீதிபதிகள் மற்றும் குடிமக்கள் பாதுகாக்கப்படுகிறார்களா ? என்பது சந்தேகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிரான தொடர் விசாரணை : சிறிதரன் விசனம் | Sl Threats For Human Rights Activists Sritharan

நீதித்துறையின் முன்னேற்றம் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீதி இல்லாத,நீதி பேசாத ,நீதி இயங்காத நாடாகவே இலங்கை தற்போது காணப்படுகிறது.

தொடர்ச்சியான விசாரணைகள்

அம்பாறை மாவட்டத்தில் கல்முனையைச் சேர்ந்த மனித உரிமை சார்ந்து செயல்படுகின்ற சிவில் சமூக செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற அநீதிகளுக்காகவும் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காகவும் தமிழர் தேச அத்துமீறல்கள் மற்றும் ஏனைய அனைத்து மனித உரிமை மீறல்களுக்காகவும் நீதி கேட்டு குரல் கொடுத்துப் பல்வேறு செயல்பாட்டுத் தளங்களிலும் நின்று செயல்பட்டு வருகின்ற ஒரு செயற்பாட்டாளர்.

மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிரான தொடர் விசாரணை : சிறிதரன் விசனம் | Sl Threats For Human Rights Activists Sritharan

கடந்த 2023.10.12 ம் திகதி அவர் ஊரில் இல்லாத நேரம் அவரது வீட்டிற்கு சென்றிருந்த காவல்துறை பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவின் (டி.ஐ.டி) விசாரணை இருப்பதாகவும் அதற்கு அழைப்புக் கடிதம் தர வேண்டும் எனவும் கூறி அவரையும் அவரது குடும்பத்தாரையும் விசாரித்துள்ளதோடு அவரது தம்பியின் தொழில் நிலையத்திற்கும் சென்று விசாரணை அழைப்பை வழங்கியுள்ளனர்.

பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு சிங்கள மொழியில் விசாரணை அழைப்பானை அனுப்பியுள்ளார்கள். இதற்கு முன்னரும் கூட இவருக்கு இது போன்று நான்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இறுதியாக 2023.01.25 ஆம் திகதி காலை 9:30 மணிக்கு இலக்கம் சி - 02 அரச விடுதி அம்பாறை எனும் விலாசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அந்த நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் அங்கு இருந்த அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு நான்கு மணித்தியாலங்களும் 48 நிமிடங்களும் நடந்ததோடு சுமார் 24 பக்க விசாரணை அறிக்கை அவர்களால் அவரிடம் இருந்து பெறப்பட்டு எழுதப்பட்டது .

அதன் பின்னர் 2023.04.15 ஆம் திகதியும் அவரது வீட்டிற்கு பெரியநீலாவணை காவல் நிலையத்தில் இருந்து இரண்டு காவல் அதிகாரிகள் சீருடையில் வருகை தந்து பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினர் மற்றும் தங்கள் உயர் அதிகாரிகள் தங்களை அனுப்பி விசாரிக்கச் சொன்னதாகவும் கூறி விசாரணைக்கு உட்படுத்தி சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை அறிக்கை எழுதியிருந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து இப்போது இந்த அழைப்பு வழங்கப்பட்டிருக்கிறது இந்த அழைப்பு சிங்கள மொழியில் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில் சிங்களத்தில் தேசிய பாதுகாப்புக்கு இடையூறாக இருந்தமை, தொடர்பாடல் செய்தமை போன்ற விடயங்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் அதற்கான விசாரணை பிரிவு 2023.10.16 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இலக்கம் 149, 3வது மாடி கப்பிட்டல் பில்டிங்,கிருலப்பனை,கொழும்பு 05 எனும் முகவரியில் 01 ம் இலக்க விசாரணை அறைக்கு வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

இவ்வாறு தொடர்ச்சியாக இதற்கு முன்னரும் கூட நான்கு முறை இவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள் விசாரணை செய்திருக்கிறார்கள் இதுபோன்று பல காவல்துறை விசாரணைகளையும், சி.ஐ.டி.விசாரணைகளையும் செய்திருக்கிறார்கள் அதனை தொடர்ந்து இப்போதும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

இந்த நாட்டிலே இருந்து செயல்படுகின்ற இவர்களைப் போன்ற செயற்பாட்டாளர்களுக்கு விசாரணை எனும் பெயரிலே தொடர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு கொண்டிருப்பதும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருப்பதும் வேதனையான ஒரு விடயம் என்பதோடு இவ்வாறான விடயங்கள் தொடர்ச்சியாக இடம்பெறாமல் இருப்பதற்கு உரிய ஆவணம் செய்யப்பட வேண்டும்.

இந்த உயரிய சபையைக் கேட்டுக்கொள்கின்றேன். மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு விசாரணை என்ற பெயரில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படும் போது இந்த நாட்டில் எவ்வாறு அச்சமில்லாமல் வாழ முடியும்.

தாமோதரம் பிரதீபனுக்கு வழங்கப்பட்ட அழைப்பானை கடிதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடிதங்களின் பிரதிகளை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த நாட்டில் தமிழ் இளைஞர்கள் செயற்பட முடியாத அளவுக்கு பாதுகாப்பு தரப்பினரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.இது முற்றிலும் விரோதமானது.” என்றார்.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026