சாதனை பட்டியலில் இணைந்த இலங்கை வீரர்
இலங்கை சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா, ரி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
இலங்கை ஆப்கானிஸ்தான் அணிக்களுக்கிடையிலான 2வது ரி20 போட்டி தம்புள்ளையில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள்
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சதீர சமரவிக்கிரம 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஏஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பெத்தும் நிஸ்ஸங்க 25 ஓட்டங்களையும், குசல் மெந்திஸ் 23 ஓட்டங்களையும் மற்றும் வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இலங்கை அணி வெற்றி
188 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பந்து வீச்சில், ஏஞ்சலோ மெத்திவ்ஸ், பினுர பெர்ணான்டோ, வனிந்து ஹசரங்க மற்றும் மதீஷ பத்திரன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
வனிந்துவின் சாதனை
ஹசரங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ரி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார்.
இதற்கு முன்பு லசித் மலிங்கா இந்த சாதனையை படைத்திருந்தார். நேற்றைய போட்டியுடன் சாதனையை படைத்த இரண்டாவது இலங்கை வீரர் ஹசரங்கா ஆவார்.
லசித் மலிங்கா 84 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில் ஹசரங்கா 63 போட்டிகளிலேயே இந்த சாதனையை படைத்துள்ளார்.
இலங்கை ஆப்கானிஸ்தான் அணிக்களுக்கிடையிலான 3வது ரி20 போட்டி நாளையதினம்(21) நடைபெறவுள்ளது.
1️⃣0️⃣0️⃣ Wickets Strong!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) February 19, 2024
Massive congratulations to our skipper, Wanindu Hasaranga, on achieving the incredible feat of 1️⃣0️⃣0️⃣ T20I wickets!? ??#SLvAFG pic.twitter.com/aOQsCnu4nm
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |