இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

Anura Kumara Dissanayaka Sri Lanka Journalists In Sri Lanka
By Independent Writer May 22, 2026 07:04 AM GMT
Report

ஊடகத் துறையின் சுயாதீனத்தையும் ஊடகவியலாளர்களின் தொழில்முறை உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில், நேரடி கலந்துரையாடலுக்கான சந்திப்பொன்றை வழங்குமாறு கோரி இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

தேசிய ஊடகக் கொள்கை வரைவில் உள்ள தீவிர பிரச்சினைகள் மற்றும் தொழில்முறை ஊடகவியலாளர்களின் கருத்துக்கள் குறித்தும் அந்த சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

மேலும் அந்தக் கடிதத்தில், வெகுஜன ஊடக பிரதி அமைச்சருடனான கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் மற்றும் அதுகுறித்த எமது நிலைப்பாடு 2026 மே 13 ஆம் திகதி, எமது சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல், இலங்கையின் ஊடகத் துறைக்கும் பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்தது.

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

பிரதி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் 

அந்த சந்திப்பின் போது பிரதி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக எமது சங்கம் தீவிர கவலை கொண்டுள்ளது. அவை தொடர்பாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டையும் தெளிவான விளக்கத்தையும் பெற்றுக்கொள்வதே இக்கடிதத்தின் பிரதான நோக்கமாகும்.

அந்த கலந்துரையாடலின் போது பிரதி அமைச்சர் பின்வரும் விடயங்களை வலியுறுத்தினார்:

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை | Sl Working Journalists Association Requests Anura

1. தேசிய ஊடகக் கொள்கை வரைவு

தேசிய ஊடகக் கொள்கை வரைவிற்கு விரைவில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கும் என்றும், தேசிய அளவிலான ஊடகக் கொள்கை ஒன்றை உருவாக்குவது அரசாங்கத்தின் அவசியமான முன்னுரிமையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

2. கொள்கைக்கு எதிரான நிலைப்பாடுகள்

தேசிய ஊடகக் கொள்கை வரைவுக்கு எதிராக கருத்து வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்றும், இதற்கு முன்னர் அமைச்சர் அல்லது பிரதி அமைச்சருடன் கலந்துரையாடிய எந்த தரப்பும் அதற்கு எதிர்ப்பு வெளியிடவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது.

3. ஊடகத் துறையின் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு

தற்போதைய தொழிலாளர் சட்டங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தால் பல ஊடக நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன என்றும், வேலைவாய்ப்பு பாதுகாப்பு தொடர்பாக கட்டமைப்பு ரீதியான சிக்கல்கள் நிலவுகின்றன என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

4. இலங்கை பத்திரிகை பேரவை மற்றும் சுயாதீன ஊடக ஆணைக்குழு

இலங்கை பத்திரிகை பேரவையை விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்குப் பதிலாக சுயாதீன ஊடக ஆணைக்குழு அல்லது இணை-ஒழுங்குமுறை அமைப்பொன்றை உருவாக்கும் நோக்கில் பல தரப்பினரின் பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சகம் குழுவொன்றை நியமிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

5. சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய சட்டமூலங்கள்

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information Act - RTI) திருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act - OSA) தொடர்பான திருத்தங்கள் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அது சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் கீழ் இல்லாவிட்டாலும், அவற்றை விரைவுபடுத்துமாறு தொடர்புடைய அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஊடகத் தொழில்முறை நிபுணர்களுக்கான பட்டய நிறுவனம் தொடர்பான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.

6. PTA / PSTA தொடர்பான எதிர்ப்புகள்

PTA மற்றும் PSTA போன்ற சட்டங்களுக்கு எதிராக ஊடக அமைப்புகளும் சிவில் சமூக அமைப்புகளும் வெளியிட்டுள்ள எதிர்ப்புகளும் அவற்றின் காரணங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வாகன இலக்கத்தகடுகளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வாகன இலக்கத்தகடுகளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

 தேசிய ஊடகக் கொள்கை வரைவு 

இந்த கலந்துரையாடலின் போதும், தேசிய ஊடகக் கொள்கை வரைவில் உள்ள தீவிர பிரச்சினைகள் மற்றும் தொழில்முறை ஊடகவியலாளர்களின் கருத்துக்கள் குறித்து எமது சங்கம் பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் ஊடக அமைச்சருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவித்திருப்பதை மீண்டும் வலியுறுத்தினோம்.

அவ்வாறிருக்க, தேசிய ஊடகக் கொள்கை வரைவைச் சுற்றியுள்ள எமது சங்கத்தின் எதிர்ப்புகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து அமைச்சகம் அறியாதது போல் செயற்படுவது எமக்கு கடும் கவலையளிக்கிறது.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை | Sl Working Journalists Association Requests Anura

மேலும், பிரதி அமைச்சர் வெளியிட்ட மேற்கண்ட கருத்துக்கள் தற்போதைய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மற்றும் இறுதியான நிலைப்பாடுகளா என்பதை தெளிவுபடுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன், தேசிய ஊடகக் கொள்கை மற்றும் ஊடகத் துறையில் நிலவும் சிக்கல்கள் தொடர்பாக, எமது சங்கம் முன்னதாக ஊடக அமைச்சருக்கும், பிரதி அமைச்சருக்கும், ஜனாதிபதி செயலகத்திற்கும் அனுப்பியிருந்த உத்தியோகபூர்வ கடிதங்களுக்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்காதது எமக்கு ஆழ்ந்த அதிருப்தியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரதி அமைச்சர் விளக்கிய விடயங்களின் அடிப்படையில், முன்மொழியப்படும் சில சட்டங்களும் கொள்கைகளும் மக்களின் கருத்துரிமை மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, அரசின் முறைகேடுகள், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை பாதுகாக்கும் அடக்குமுறை கருவிகளாக மாறக்கூடும் என நாங்கள் கருதுகிறோம்.

முன்னாள் அரசுகள் ஊடகவியலாளர்களையும் அரசியல் எதிர்ப்பாளர்களையும் கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களே இன்று அதே சட்டங்களை புதிய வடிவிலும் புதிய பெயர்களிலும் மீண்டும் கொண்டு வர முயற்சிப்பது வரலாற்றின் பரிதாபகரமான முரண்பாடாகும்.

இன்று எங்களை அடக்க பயன்படுத்தப்படும் சட்டங்களும் கொள்கைகளும், நாளை அதிகாரத்தை இழந்த பின் உங்கள்மீதும் பயன்படுத்தப்படலாம் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.

எனவே, ஊடக நிபுணர்கள், ஊடகவியலாளர்கள், ஊடக உரிமையாளர்கள், ஊடக தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் விரிவான ஒப்புதலுடனேயே இத்தகைய சட்டங்களும் கொள்கைகளும் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

ஊடகத் துறையின் சுயாதீனத்தையும் ஊடகவியலாளர்களின் தொழில்முறை உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில், மேற்கண்ட விடயங்கள் தொடர்பாக எமது சங்கத்துடன் நேரடி கலந்துரையாடலுக்கான சந்திப்பொன்றை வழங்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். தங்களின் விரைவான பதிலை எதிர்பார்க்கிறோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

வழமைக்கு திரும்பும் கட்டுநாயக்க விமான நிலைய சேவைகள்

வழமைக்கு திரும்பும் கட்டுநாயக்க விமான நிலைய சேவைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026