உள்நாட்டு கடன் சீரமைப்பு பற்றி இன்னமும் முடிவில்லை - பதில் நிதி அமைச்சர்
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை முன்னெடுக்கும் செயன்முறை குறித்து இன்னமும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளதோடு அரசாங்கம் அதன் தீர்மானத்தை மாற்றுவதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
அவரது கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பதில் நிதி அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
முன்னேற்றம்
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய, கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வது தொடர்பான சர்வதேச மட்டத்திலான பேச்சை இந்த ஆட்சி முன்னெடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
அத்துடன், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினை முன்னெடுப்பதற்கான செயன்முறை இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும், வங்கி மற்றும் நிதி துறையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
(1/2) The process of domestic debt optimization is not finalized yet. The govt is fully committed to ensure the stability of the banking and financial sector. Recognizing the sensitivity, premature speculations without a conclusion could potentially undermine market confidence pic.twitter.com/oncDCOn9Hc
— Shehan Semasinghe (@ShehanSema) June 18, 2023
மேலும், எதிர்வுகூறல்கள், முன்கூட்டிய ஊகங்கள், சந்தைத்துறையில் நம்பிக்கையை குறை மதிப்புக்கு உட்படுத்தலாம்.
எனவே இந்த விடயத்தில் நாம் பொறுப்புடனும் விடாமுயற்சியுடனும் கருத்துக்களை வெளியிடுவது முக்கியமாகும் என வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“கடன் மறுசீரமைப்பு முயற்சியில் இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதில் நாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
இவை நிதி ஸ்திரதன்மையை அடைவதற்கு சாதகமான உடன்படிக்கைக்கு வழிவகுக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
2/2) Therefore it is of importance that we speak on this matter responsibly & diligently. We have made progress in engaging with our bilateral creditors on debt restructuring efforts. We are optimistic that the engagements will lead to a favorable agreement to achieve stability pic.twitter.com/avbJu7hS8Y
— Shehan Semasinghe (@ShehanSema) June 18, 2023
