ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு மைத்திரிக்கு அழைப்பு
election
maithripala sirisena
gotabaya rajapaksa
next presidential
By Vanan
எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
காலியில் நேற்று முன்தினம் நடந்த சுதந்திரக்கட்சியின் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை தற்போதைய அரச தலைவர கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கைகளை முடிவுறுத்த மேலும் 3 ஆண்டுகள் தேவை எனவும், இதனால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கும் சாத்தியம் இருப்பதாகவும் அண்மையில் ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியாக இருக்கும் மைத்திரி தரப்பு எவ்வாறான முடிவுகளை எடுக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி