சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்த ஸ்ரீ.ல.மு.காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்ட குழுகூட்டம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம், சஜித் பிரேமதாசாவை (Sajith Premadasa) வெல்ல வைக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை அம்பாறை (Ampara) மாவட்டத்தில் முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட குழுவின் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது இன்று (06) கட்சியின் தவிசாளரும், வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எல். அப்துல் மஜீத் தலைமையில் சாய்ந்தமருதில் இடம்பெற்றது.
07 உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவில் கல்முனை தேர்தல் தொகுதிக்கான ஜனாதிபதி தேர்தல் பணியை முன்னெடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
பொத்துவில் தேர்தல் தொகுதிக்கான ஜனாதிபதி தேர்தல் பணியை முன்னெடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம், சம்மாந்துறை தொகுதிக்கான ஜனாதிபதி தேர்தல் பணியை முன்னெடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ. மன்சூர் ஆகியோர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த குழுவில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான றஹ்மத் மன்சூர், முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயருமான கலாநிதி சிராஸ் மீராசாகிப், முஸ்லிம்காங்கிரஸின் அரசியல் மற்றும் சமய விவகார இணைப்பாளர் என்.ரீ.சப்றாஸ், முஸ்லிம்காங்கிரஸின் உச்ச பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளருமானஏ.சீ. சமால்டீன் ஆகியோர் அடங்கியுள்ளனர்.
மீளாய்வுக் கூட்டம்
ஜனாதிபதி தேர்தல் காரியாலயங்களை 07.09.2024 இல் திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்கள், வட்டார ரீதியான பிரச்சாரக் கூட்டங்கள், வட்டார ரீதியாக வீடு வீடாக சென்று பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற தீர்மானங்கள் இதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீண்டும் அடுத்த மீளாய்வுக் கூட்டம் எதிர்வரும் 10.09.2024 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |