பசில் வந்தவுடன் மொட்டு எடுக்கவுள்ள முடிவு : பரபரப்பாகும் கொழும்பு அரசியல்
Basil Rajapaksa
Ranil Wickremesinghe
Prasanna Ranatunga
Election
By Sumithiran
சிறி லங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது அதிபர் வேட்பாளர் யார் என்பதை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து விரைவில் இலங்கை வந்தவுடன் தீர்மானிக்கும் என அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணிலை சுற்றி அணிதிரளவேண்டும்
"தேசத்தில் ஒருவித ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளதால், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றி பொதுஜன பெரமுன அணி திரள வேண்டும்.
மற்றவர்கள் ஓடும்போது தேசத்தைக் பொறுப்பெடுத்தவர்
கடந்த 2022 இல் நாடு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட போது மற்றவர்கள் ஓடும்போது தேசத்தைக் பொறுப்பெடுத்தவர் ரணில் என்று அவர் கூறினார்.
விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என வெளியான செய்திகளை அமைச்சர் நிராகரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்