ரணிலின் முடிவால் அதிருப்தியடைந்த பெரமுன
அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றம் குறித்து மகிழ்ச்சியடைவில்லை - மிகவும் கவலையடைந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்த அவர், தமக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான விரிசல் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பெரும்பான்மை ஆதரவு
இதன்போது மேலும் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அவர், “ பொதுஜன பெரமுன அவருக்கு வழங்கிவரும் ஆதரவை அதிபர் மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளார். அதன் முக்கியத்துவத்தை அவர் கருத்தில் கொள்ளவில்லை.
அமைச்சரவை மாற்றத்தின் போது ஏனைய கட்சிகள் குறித்து அக்கறை காட்டப்படுகின்றது. பொதுஜனபெரமுன குறித்து அக்கறை காட்டப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு120 பேரின் ஆதரவு உள்ளது. இதில் 100 பேர் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்.
ஆகவே அதிபர் பொதுஜன பெரமுனவின் ஆதரவை மிகவும் சாதாரணமாக கருதியுள்ளார்” என்றார்.