சுற்றுலாப்பயணிகளுக்காக அறிமுகப்படுத்தவுள்ள புதிய திட்டம்
இலங்கையில் முதன் முறையாக சுற்றுலா வலயங்களை உள்ளடக்கிய ‘கொலோம்புர கரிகா’ என்ற சிறப்பு சொகுசு பேருந்து சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
இந்த சொகுசு பேருந்து சேவையானது வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் 66 வருட வரலாற்றில் முதல் தடவையாக இந்த சொகுசு பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பயிற்சி பெற்ற சாரதி
இந்த பேருந்து சேவையின் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள 07 சுற்றுலா வலயங்கள் உள்ளடக்கப்படவுள்ளது.
இந்த பேருந்துகளில் பயிற்சி பெற்ற பேருந்து சாரதி, நடத்துனர் மற்றும் ஒரு தனிநபரும் பல்வேறு சேவைகளை வழங்குவதற்கு வசதியாக இணைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சுற்றுலா சேவைக்காக ஈடுபடுத்தப்படவுள்ள பேருந்துகளை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பார்வையிடும் விஜயத்தில் ஈடுபட்டார்.
மத மற்றும் கலாச்சார அடையாளம்
இதன் போது அவர் தெரிவித்ததாவது,
கொழும்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு மத மற்றும் கலாச்சார அடையாளங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
அதற்குரிய நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |