திருகோணமலையில் பாம்பு கடிக்கு இலக்கான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலையில் கோமரங்கடவல - கல்யாணபுர பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் ஒருவன் பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (13.08.2023) காலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ,
மேலதிக சிகிச்சை

நெதின தேனாஸ் என்ற குறித்த சிறுவன் வீட்டு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது பாம்பு தீண்டிய நிலையில், மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

பெற்றோர்கள் சிறுவர்களை பாதுகாப்பற்ற பற்றை காடுகளுக்கு அருகில் விளையாடுவதற்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு திருகோணமலை பொது வைத்தியசாலையின் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.