புற்றுநோயை குணப்படுத்தும் சவர்க்காரம் : அமெரிக்க மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு (காணொளி)
புற்றுநோயை குணப்படுத்தும் சவர்க்காரம் ஒன்றை கண்டு பிடித்து அமெரிக்க மாணவன் சாதனை படைத்துள்ளான்.
அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தின் அன்னண்டேல் பகுதியை சேர்ந்த 14 வயதான ஹேமன் பெகேல் (Heman Bekele) எனும் 9-ஆம் வகுப்பு மாணவனே இந்த கண்டுபிடிப்பு சாதனையை நிகழ்த்தியவனாவான்.
இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி
அமெரிக்காவில் 5-ஆம் வகுப்பிலிருந்து 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களின் விஞ்ஞான ஆர்வத்தை ஊக்குவிக்கவும், உலகில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த கூடிய கண்டுபிடிப்புகளில் அவர்கள் தங்கள் அறிவாற்றலை செலுத்தவும், "3 எம் அண்ட் டிஸ்கவரி எஜுகேஷன்" (3M and Discovery Education) எனும் அமைப்பால் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போட்டியில் பங்கேற்ற மேற்படி மாணவனே இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளான்.
இந்த சோப்பிற்கான உற்பத்தி செலவு ஒரு அமெரிக்க டொலருக்கும் (ரூ.80) குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தோல் புற்றுநோயை இந்த சோப் குணமாக்கும் என்பதும் இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.
முதல் பரிசை வென்ற ஹேமன்
பல இளம் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் ஹேமன் முதல் பரிசை வென்றான். அத்துடன் "அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானி" எனும் விருதும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டான்.