குற்றவாளிகளின் அதிகார மையமாக மாறும் நாடாளுமன்றம் - சோபித தேரர் சுட்டிக்காட்டு
sri lanka
parliament
sobitha thero
By Vanan
சிறுமி இசாலினியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாதென சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாக நாடாளுமன்றத்திலிருந்து கூட வெளியேற்றப்பட வேண்டும்.
இதுதொடர்பாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணைக்குழு, பொலிஸார் மற்றும் அதிகாரிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள், கொலைகாரர்கள் மற்றும் திருடர்கள் போன்ற குற்றவாளிகள் நாடாளுமன்றத்தை தங்கள் அதிகார இடமாக மாற்றியுள்ளனர்.
அத்தோடு ரிஷாட் பதியுதீன் போன்றவர்களுக்காக நாடாளுமன்றத்திலுள்ள அனைவரும் வெட்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி