அதிகரிக்கும் இணையவழி நிதி மோசடிகள்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!
வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் இணையவழி நிதி மோசடிகள் தொடர்பில் காவல்துறை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குத் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அதன்படி, dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாக காவல்துறை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி
முகப்புத்தகம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்வதன் மூலம் பொதுமக்கள் நிதி மோசடிக்குள்ளாவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இணைப்புகளைத் திறக்கவோ(Links) அல்லது ஒரு முறை கடவுச்சொற்கள்(OTP/ PIN), குறுஞ்செய்திகள்(SMS)மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் அனுப்பப்படும் நிதி உதவிக்கான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவோ வேண்டாம் என்றும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |