யாழில் சோலர் அனுமதியில் தொடர்ந்த முறைகேடுகள் : விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு

Jaffna Ceylon Electricity Board Public Utilities Commission of Sri Lanka
By Shalini Balachandran Apr 09, 2025 11:06 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

யாழ் சோலார் இணைப்பில் ஏற்படும் முறைக்கேடுகள் தொடர்பில் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (Public Utilities Commission of Sri Lanka) தனது தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கூரைமேல் சோலர் இணைப்பு வழங்கும் போது, புதிய இணைப்பு மற்றும் கட்டமைப்புக்கான நிறுவுதலுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் எதையும் கோர முடியாது ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் – சுன்னாகம் வாரியப்புலம் பகுதியைச் சேர்ந்த மின் பாவனையாளர் ஒருவர் 2023 ஆண்டு கூரைமேல் சோலர் இணைப்பு அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தார்.

பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் : பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கை

பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் : பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கை

செல்வாக்கின் அடிப்படை

இந்தநிலையில், அவருக்கு அனுமதி வழங்காமல், 2024 ஆம் ஆண்டு விண்ணப்பித்த அதே இடத்தைச் சேர்ந்த மற்றொருவருக்குச் செல்வாக்கின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படாத கட்டடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

யாழில் சோலர் அனுமதியில் தொடர்ந்த முறைகேடுகள் : விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு | Solar Connection Installation Fee In Sri Lanka

இதையடுத்து, குறித்த பாவனையாளர் இது தொடர்பில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடளித்தார்.

முறைப்பாட்டை அடுத்து, முறைப்பாட்டாளருக்கு அனுமதியை வழங்குமாறு பணிக்கப்பட்ட நிலையில், இணைப்புக்காக ரூபா 11 இலட்சம் செலுத்துமாறு யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகம் கோரியுள்ளது.

மறைந்த எம்.பியின் வெற்றிடத்திற்கு புதியவர் நியமனம்

மறைந்த எம்.பியின் வெற்றிடத்திற்கு புதியவர் நியமனம்

மேன்முறையீடு 

இதையடுத்து, இவ்வாறு பணம் கோரியமைக்கான ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட பாவனையாளர் மேன்முறையீடு செய்திருந்தார்.

அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவில், இலங்கை மின்சார சபை கூரைமேல் சோலர் இணைப்பு அனுமதி வழங்கும் போது, அந்தந்தப் பகுதிகளுக்கான மேலதிக புதிய இணைப்பு மற்றும் கட்டமைப்புக்கான நிறுவுதலுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் எதையும் கோர முடியாது என்று இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளருக்கு மீண்டும் பணித்திருக்கிறது.

யாழில் சோலர் அனுமதியில் தொடர்ந்த முறைகேடுகள் : விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு | Solar Connection Installation Fee In Sri Lanka

இதனுடன், சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தில் சோலர் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களில் பலருக்கு அனுமதி வழங்கப்படாமை, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர் பொருத்துவதில் பாரபட்சம் காட்டுதல் போன்ற முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளது.

இந்த முறைகேடுகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கும், மின் சக்தி வலு அமைச்சுக்கும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இது வரை முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

பல அனுமதிகள் 

இருப்பினும், இலங்கை மின்சார சபை அவற்றைக் கண்டும் காணாமல், முறையற்ற விதத்தில் பல அனுமதிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

யாழில் சோலர் அனுமதியில் தொடர்ந்த முறைகேடுகள் : விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு | Solar Connection Installation Fee In Sri Lanka

இருப்பினும், பிராந்திய மின் பொறியியலாளர் அவை குறித்துக் கவனமெடுக்காமல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் சோலர் அனுமதிகளை வழங்கி வந்துள்ளார்.

இந்தநிலையில், தொடர்ந்த இந்த முறைக்கேடுகள் விவகாரம் தொடர்பில் தற்போது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன் வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சற்றுமுன் வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு 5

20 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி