தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்
தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவரது 90 ஆவது வயதில் காலமானார்.
உடல்நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1936ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழறிவு, நகைச்சுவை மற்றும் சிறப்பான பேச்சாற்றலால் பட்டிமன்ற உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர்.
திரைப்பட துறை
தொலைக்காட்சி பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

இந்திய தமிழ் தொலைகாட்சிகளில் பட்டிமன்ற நடுவராக வலம் வந்த அவர் 13,000 பட்டிமன்றங்களில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
தொலைக்காட்சி மட்டுமின்றி திரைப்பட துறையிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாலமன் பாப்பையா, பட்டிமன்றங்களில் பேசி தமிழுக்கென தனக்கான இடத்தை கொண்டுவந்தவர்.
ஆய்வு நூல்கள்
இவர் பல ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.

இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அவரது மறைவுக்குப் பல்துறைச் சார்ந்த பிரபலங்களும், தமிழார்வலர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26