காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு விரைவில் தீர்வு! உறுதிபூண்டார் ஜனாதிபதி கோட்டாபய
Gotabhaya Rajapaksa
People
By Vasanth
காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு தீர்வொன்றை காண்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபூண்டுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே தெரிவித்துள்ளார். இது குறித்து இந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்திப்பார்.
உண்மையில் இந்த விவகாரத்திற்கு முடிவை காண்பதற்கு அவர் உறுதிபூண்டுள்ளார்.
ஜனாதிபதி காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை செவிமடுக்க விரும்புகின்றார்.
அவர்களுடைய உண்மையான துயரங்களை செவிமடுக்க விரும்புகின்றார் - அவர்களிற்கு ஒரு தீர்வை முன்வைக்க விரும்புகின்றார். இது விரைவில் இடம்பெறும் என்றார்.