வாழ்வை மீட்க போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்: ஜனவரிக்குள் தீர்வு என ஆளுநர் உறுதி!
வடக்கு மாகாணாத்தில் உள்ள பாடசாலைகளில் சிங்கள் மொழி மூல கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு ஜனவரி மாதத்துக்குள் தீர்வு தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
கம்பஹாவில் கணவன், வவுனியாவில் மனைவி, பிள்ளைகள் நடு வீதியில், எமது குடும்பம் பிரச்சினைகளால் தத்தளிக்கின்றது என கண்ணீர் விடும் குறித் ஆசிரியர்கள், வடக்கின் ஆளுநரும் தமக்கன தீர்வை வழங்க பின்னடிக்கின்றார் என குற்றம் சாட்டிய நிலையில் ஆளுநரின் இந்த பதில் வெளியாகியுள்ளது.
கொழும்பு, ஹம்பகா, காலி, களுத்துறை என பல வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 40 இற்கும் அதிகமான வடக்கு மாகாணாத்தில் உள்ள பாடசாலைகளில் சிங்கள் மொழி மூல கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் தமது இடமாற்றம் தொடர்பில் கரிசனை செலுத்துமாறு வடக்கின் ஆழுநரிடம் இன்றையதினம் (8) கோரிக்கை விடுத்திருந்தனர்.
குடும்பத்தில் பிரச்சினைகள்
இதன்போது தோழில் மற்றும் தமது வாழ்க்கை நிலைகுறித்து மொனிக்கா பிரயங்கனி வீரக்கோன் என்ற ஆசிரியர் கருத்து கூறுகையில், 8 ஆண்டுகள் நியமனத்தின் பின் இடமாற்றன் என்ற ஒப்பந்தத்தின் பிரகாரமே நாம் வடக்கின் குறிப்பாக வவுனியா முல்லைத்தீவு போன்ற மாவடங்களில் உள்ள சிங்கள மொழி மூல படசலைகளுக்கு நியமனம் பெற்து சென்றிருந்தோம்.
ஆனால் இன்று 12 வருடங்ககுக்கும் மேலாக சேவைக்காலம் முடிந்துவிட்டது. நாம் எமது இடமாற்றம் குறித்து கோரிக்கைகளை சமர்ப்பித்து அது கிடைத்தும் குறிப்பாக அதிபர் எம்மை விடுவித்தும் வலையக் கல்வி அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.
இதனால் நாம் பல்வேறு இடர்பாடுகளை நாளாந்தம் எதிர்கொள்ள நேரிடுகின்றது. இதே நேரம் தமிழ் மக்கள் வாழ்வியல் போன்று எமது எமது வாழ்வியல் இல்லை. இதனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகிவருகின்றது.
இவ்வாறு இடமாற்றம் கிடையாத விரக்தி ஒருறம் இருக்க குடும்பத்தில் பிரச்சினை மறுபுறம் உருவானதால் ஹம்பகா மடுகங்கந்த தேசிய பாடசாலை ஆசிரியர் தற்கொலை செய்திருந்தார்.
இதேபோன்று பல அசிரியர்கள் கணவர்களால் விவாகரத்துக் கோரும் நிலைக்குள் சென்று நீதிமன்றுடன் வாழ்வை மீட்க நாளாந்தம் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இடமாற்றங்கள்
எமது வாழ்வியல் நிலையை அதிகாதிகள் உணருவதாக இல்லை.இன்று காலை ஆளுனரை சந்திக்க வந்த்ஜ அனைவரும் வடக்கின் பல படசாலைகளில் 12 வருடங்களுக்கு மேலாக சேவையில் ஈடுபட்டு வருகின்றவர்கள்.
வடக்கு கிழக்கின் ஆசிரியர் இடமாற்ற கோவையின் பிரகாரம் தாம் சேவையை குறித்த மாவட்டங்களில் நிறைவு செய்தும் இதுவரை இடமாற்றங்கள் அவர்களுக்கு கிடைக்கப்பெறபில்லை.
கடந்த அரசின் அதிகாரிகளிடம் தமது நிலைமைகளை எடுத்துக் கூறியும் தீர்வுகள் எதுவும் வழங்கப்படாத விரக்தியுடன் இன்று ஆளுனரிடம் வந்துள்ளோம். அவரும் எம்மை முழுமையாக சந்திக்காது மூவரை அழைத்து பேச்சு நடத்துகின்றார்.
எனவே எமக்கான தீர்வு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வரை நாம் எம்மாலான முயற்சிகளை செய்யவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
இன்னிலையில் குறித்த ஆசிரியர்களிடன் கலந்துரையாடிய ஆளுநர் வெற்றிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஜனவரி மாதத்துக்குள் தீர்வை வழங்குவதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



