விவசாயிகளின் உரமானியம் குறித்து வெளியான நற்செய்தி
விவசாயிகளுக்கு ஹெக்டேயர் ஒன்றுக்கு 25000 ரூபா உர மானியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை விவசாய அமைச்சில் நேற்றையதினம் (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathne) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உர மானியத்திற்கான முதற்கட்ட பணம் திறைசேரியிலிருந்து பெறப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச அண்மையில் அறிவித்திருந்தார்.
உர மானியம்
அதன்போது, 678.06 மில்லியன் ரூபாய் திறைசேரியிலிருந்து பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி, விவசாயிகளுக்கு முதல் கட்டமாக 15, 000 ரூபாயும், 2ம் கட்டமாக 10, 000 ரூபாவும் மொத்தமாக 25000 ரூபா உர மானியம் வழங்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |