கிளிநொச்சியில் கோரம் - மாமனாரின் மண்வெட்டி தாக்குதலில் மருமகன் பலி
Kilinochchi
Sri Lanka Police Investigation
Crime
Death
By Sumithiran
கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று (04) அதிகாலை மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் ஆறுமுகம்பிள்ளை துஸ்யந்தன் எனும் 34 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.
பிரிந்திருந்த மனைவியை பார்க்க சென்றவேளை சம்பவம்
பிரிந்திருந்த தனது மனைவியை பார்க்க சென்ற மருமகனை, மனைவியின் தந்தை வழிமறித்துள்ளார். இதன்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு முரண்பாடு முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாமனார் மண்வெட்டி பிடியினால் தாக்கியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி
சம்பவத்தில் படுகாயமடைந்த மருமகன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்