நாசாவுடன் இணைந்து செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்...!
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து 23 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில், விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பலவும் போட்டி போட்டு செயற்கைக்கோள்களை அனுப்பி வருகின்றன.
இந்த போட்டியில் அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனமும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள்
இந்நிலையில் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து 23 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை அனுப்பி வைத்துள்ளது.
அதன்படி இந்த செயற்கைக்கோள்களானது புளோரிடா மாநிலத்திலுள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன.
அதிவேக இணைய சேவை
இந்த செயற்கைக்கோள்களை அனுப்புவதற்கு போல்கன்-9 ரக ரொக்கெட்டை நாசாவுடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பியது.
இந்த செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இவை அதிவேக இணைய சேவைகளுக்காக அனுப்பப்பட்டு இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.