ஸ்பெயின் அடுத்த தடையால் ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களுக்கு எழுந்துள்ள நெருக்கடி
ஈரான் போரில் ஈடுபட்டுள்ள விமானங்களுக்கு ஸ்பெயின் தனது வான்வெளியை மூடிவிட்டது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்பெயினில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள ரோட்டா மற்றும் மோரோன் இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கான தடையும் இதில் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தடை முன்னதாக ஸ்பெயின் தலைவர்களுக்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையே ஒரு மோதலை ஏற்படுத்தியது.
அமெரிக்க இராணுவ விமானங்கள்
போருடன் தொடர்புடைய விமானங்கள் ஸ்பானிய வான்வெளியில் பறப்பதைத் தடுப்பது வரையிலும் இந்த நடவடிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, உதாரணமாக, பிரித்தானியா அல்லது பிரான்சில் உள்ள அமெரிக்க இராணுவ விமானங்களுக்கும் இதற்குள் அடங்கலாம் என கூறப்பட்டுள்ளது.
ஸ்பானிய செய்தித்தாள் ஒன்று, இராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்த முன்னேற்றம் குறித்து செய்தி வெளியிட்டது.
ஸ்பெயினின் இந்த முடிவு
இதன்படி ஸ்பெயினின் இந்த முடிவு, அமெரிக்க இராணுவ விமானங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் வழியில் ஸ்பெயினைக் கடந்து செல்லாதிருக்க கட்டாயப்படுத்துகிறது.

"ஒருதலைப்பட்சமாகவும் சர்வதேச சட்டத்திற்கு எதிராகவும் தொடங்கப்பட்ட ஒரு போரில் பங்கேற்கவோ அல்லது பங்களிக்கவோ கூடாது என்று ஸ்பானிய அரசாங்கம் ஏற்கனவே எடுத்த முடிவின் ஒரு பகுதியே இந்த முடிவு" என்று பொருளாதார அமைச்சர் கார்லோஸ் குவெர்போ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களைப் பொறுப்பற்றவை மற்றும் சட்டவிரோதமானவை என்று கூறி, அவற்றின் மிகக் கடுமையான எதிர்ப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 5 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்