"கோல்டன் விசா" திட்டத்தை ரத்து செய்யவுள்ள ஐரோப்பிய நாடு..!
ஸ்பெயின் நாட்டில் ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட உரிமை வழங்கும் "கோல்டன் விசா" திட்டத்தை ரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணக்காரர்கள் பெருந்தொகை ஒன்றை முதலீடு செய்யும் நிலையில், அவர்களுக்கு சில நாடுகள் கோல்டன் விசா என்னும் ஒரு விசாவை வழங்கிவந்தன. ஆனால், சமீப காலமாக சில நாடுகள் அந்த விசாவை ரத்து செய்துவருகின்றன.
இந்நிலையில், ஸ்பெயினும் தங்க விசா திட்டத்தை ரத்து செய்யவுள்ளது.
கோல்டன் விசா திட்டம்
ஸ்பெயின் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் அல்லாதவர்கள் குறைந்தபட்சம் 500,000 யூரோக்கள் ($541,250) - அடமானம் எடுக்காமல் - ஸ்பானிஷ் ரியல் எஸ்டேட்டில் சிறப்பு அனுமதியைப் பெற்று, மூன்று வருடங்கள் நாட்டில் வாழவும் வேலை செய்யவும் உரிமம் ஒன்றை வழங்கிவந்தது.
இந்நிலையில், நாட்டில் வரி செலுத்தும் மக்களுக்கு வீடுகள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஸ்பெயின் பிரதமரான பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez), இந்த கோல்டன் விசா திட்டத்தை ரத்து செய்வதால், வீடு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடு கிடைக்க உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயினின் வீட்டுப் பிரச்சினை கோல்டன் விசா திட்டத்தால் ஏற்படவில்லை, மாறாக விநியோக பற்றாக்குறை மற்றும் தேவை அதிகரிப்பால் ஏற்பட்டது என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அண்டை நாடான போர்ச்சுகல் சமீபத்தில் தனது சொந்த "கோல்டன் விசா" திட்டத்தை புதுப்பித்துள்ளதோடு வீட்டு நெருக்கடியை சமாளிக்க ரியல் எஸ்டேட் முதலீட்டை விலக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |