கனடா சபாநயகர் பதவி விலகினார்
கனடா நாடாளுமன்ற சபாநயகர்  ஆண்டனி ரோட்டா பதவி விலகியுள்ளார்.
நாஜி வீரருக்காக தலைவணங்கிய விவகாரத்தில் கடும் விமர்சனம் எழுந்ததையடுத்து, அவர் பதவி விலகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
கடும் விமர்சனம்
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, கடந்த வாரம் கனடா சென்றார்.

அங்கு, கனடா நடாளுமன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் ஜெர்மனிய சர்வாதிகாரி அடல்ட் ஹிட்லரின் நாஜிப்படை வீரருக்கு ,பிரதமர் ட்ரூடோ உட்பட அனைவரும் எழுந்து நின்று தலைவணங்கி மரியாதை செலுத்தியதால் கடும் விமர்சனத்திற்குள்ளானார்கள்.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்டனி ரோட்டாவும் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.
இதையடுத்து நேற்றுமுன்தினம்(26) சபாநாயகர் பதவி விலகப்போவதாக அறிவித்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து துணை சபாநாயகர் தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யூத இன மக்களிடம் மன்னிப்புக் கோரல்
இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுன்ற கீழவை சபாநாயகர் யூத இன மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் போலிவர் கடும் கண்டனங்களை எழுப்பிய நிலையில் மன்னிப்பு கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        