வவுனியாவில் சுகாதார அதிகாரிகள் எடுத்த திடீர் நடவடிக்கை!
corona
sri lanka
people
By Shalini
வவுனியா இலங்கை வங்கியின் நகரக்கிளை மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதார அதிகாரிகள் நேற்று விசேட மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை வங்கி அலுவலகம் மற்றும் வியாபார நிலையங்கள், உணவகங்களில் நேற்று காலை விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சுகாதார நடைமுறைகளை பேணாமை மற்றும் முகக் கவசங்கள் அணியாதவர்களின் விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர்களால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்