புதிய பாடத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சரின் தீர்மானம்!
இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்கான பாடத்திட்டங்களை தயாரிப்பதில் எதிர்வரும் நாட்களில் எந்தவொரு தரத்திலும் இணைய இணைப்புகளைச் சேர்ப்பதை முற்றிலுமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (09.01.2026) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கல்வி நிறுவனம்
தேசிய கல்வி நிறுவனத்தின் கல்வி விவகார சபை மூலம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த பாடத்திட்டங்களில் தற்போது சேர்க்கப்பட்டுள்ள வலைத்தளங்கள் மற்றும் பிற ஆதாரங்களுக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் அரசாங்க வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் கொள்முதல் ஆகியவற்றில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 7 மணி நேரம் முன்