இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்த ரணிலின் கலந்துரையாடல்
ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுவிற்கும் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்று உறுதியான இணக்கப்பாடு இன்றி நிறைவுப் பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று (12) பிற்பகல் இடம்பெற்றதுடன், கட்சியின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கட்சியின் பதவிகளில் மாற்றம் வேண்டும் என அக்கட்சியைச் சேர்ந்த சிலர் தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உறுதியான இணக்கப்பாடு
அண்மையில், முன்னாள் அமைச்சர் கருணாநாயக்கவுக்கு பிரதித் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று யோசனை முன்வைத்திருந்த நிலையில், அந்த பதவியை மாற்ற வேண்டிய அவசியமில்லை என மற்றொரு குழு தெரிவித்திருந்தது.

குறித்த கலந்துரையாடல் உறுதியான இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுவும் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று (13) மற்றுமொரு கலந்துரையாடலை நடத்த திட்டமிட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.