தமிழ் அரசுக் கட்சியின் மாற்று வியூகம்..! புது கட்சி - புது சின்னத்தில் களமிறக்கம்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடியும் குறித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் இதற்கான மாற்று வியூகம் ஒன்றை இலங்கை தமிழ் அரசுக் கட்சி அமைத்து அது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று சற்று முன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
குறித்த விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.
தமிழ் அரசுக் கட்சியின் வியூகம்
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு எனும் கட்சியில் தராசு சின்னத்தில் போட்டியிட முன் வந்துள்ளது.
இந்தநிலையில், குறித்த கட்சியின் உறுப்பினர்கள் இராஜனாமா செய்து இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசேட கலந்துரையாடல் நிகழ்வு, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் இடம்பெற்று வருகின்ற நிலையில், நாடாளுமன்ற
உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற
உறுப்பினர் றவூவ் ஹக்கீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.