வெளிநாட்டிலிருந்து வடக்குக்கு வரும் மக்களுக்கு விசேட உள்ளூர் விமான சேவை
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மற்றும் பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் முடிந்ததும் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக நேற்று(22.02.2026 குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
"வடக்கில் வசிப்பவர்கள் தற்போது வெளிநாட்டிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைத்துக்கு வரும்போது சாலை வழியாக பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
உள்நாட்டு விமான சேவை
எனினும் பலாலி விமான நிலைய விரிவாக்கம் முடிந்ததும் குறித்த விடயம் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.
பலாலி விமான நிலையத்தையும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தையும் இணைக்கும் உள்நாட்டு விமான சேவை இதனடிப்படையில் ஆரம்பிக்கப்படும்.
விரிவாக்கப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன் பலாலி விமான நிலையம் பெரிய விமானங்களைக் கையாள முடியும் என்றும் அவர் கூறினார்.
அத்தோடு ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் பலாலியிலிருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
பலாலி விமான நிலைய விரிவாக்கத்தின் முதல் கட்டம் இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |