ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்
Colombo
Sri Lankan Peoples
NPP Government
By Thulsi
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் இன்று (17) செயற்படாது என பொதுமக்களுக்கு அறிவித்தல் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் அமைச்சு வெளிட்டுள்ள விசேட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
ஒருநாள் சேவை
கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது அதனை வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று இயங்காது என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |