சிவனொளிபாத மலை யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இன்று விசேட வேலைத்திட்டம்
சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்ரீகர்களுக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, இன்றைய தினம் (25) சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (25) இந்த ஆண்டின் (2024) முதலாவது போயா நாள் என்பதால் தரிசனத்திற்காக வரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முதலாவது போயா நாள்
போயா தினங்களில் சிவனொளிபாத மலைக்கு சாதாரணமாகவே அதிகளவில் யாத்ரீகர்கள் வருகை தரும் நிலையில் இன்று (25) ஆண்டின் (2024) முதலாவது போயா நாள் என்பதால் யாத்ரீகர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இன்று போயா தினத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நல்லதண்ணியா காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
தனியார் வாகனங்களின் பயன்பாடு
சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்ரீகர்களில் பெரும்பாலோர் புகையிரதங்களிலும், பொதுப் போக்குவரத்து மூலமும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதன் காரணமாக சிவனொளிபாத மலைக்கான தனியார் வாகனங்களின் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |