கட்சியை சார்ந்தவரென்பதால் சுயாதீன கருத்துக்களை நசுக்கக்கூடாது: ராஜித சேனாரத்ன
அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதற்காக எவரும் தனது சுயாதீன கருத்துக்களை நசுக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை நீக்குவதற்கு தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையிலேயே இவர் இது தொடர்பாக அவரது சமீபத்திய முகப்புத்தக பதிவு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து ராஜித சேனாரத்ன தெரிவிக்கையில், “நீங்கள் ஒரு கட்சியில் சேர்ந்ததாலோ அல்லது அதில் பதவி வகிப்பதாலோ உங்களது சுதந்திரமான கருத்துக்களை நீங்கள் அடக்கி வைக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை.
கருத்து வேறுபாடுகள்
அத்தோடு நமது சித்தாந்தம் அல்லது மனசாட்சிக்கு பொருந்தக்கூடிய எந்த கட்சியும் உலகில் இல்லை.
எங்கள் சில அறிக்கைகள் கட்சியின் நிலைப்பாட்டுடன் முரண்படலாம் அத்தோடு சில சமயங்களில் கட்சியின் சில நடவடிக்கைகள் நமது சித்தாந்தங்களுடனும் மோதலாம்.
இதன் பொருள் நாங்கள் கட்சிக்கு துரோகம் செய்தோம் அல்லது கட்சி எங்களுக்கு துரோகம் இழைத்தோம் என அர்த்தமல்ல.
ஒரு அரசியல் கட்சியில் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த தலைவர்களும் மற்றும் இலட்சக்கணக்கான உறுப்பினர்களும் இருக்கலாம், ஒரு கட்சிக்குள் பல கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்களும் இருக்கலாம்.
கருத்தியல் மோதல்
காரணம் கருத்துக்கள் இல்லாமல் அரசியல் இயக்கம் முன்னேறாது அத்தோடு தனிப்பட்ட வெறுப்பை உருவாக்கக் கூடாது.
மேலும் முதிர்ச்சியுள்ள மனிதர்களாக இருங்கள் அத்தோடு ஒரு கட்சியில் உணர்ச்சிவசப்பட்டவர்கள் இருக்கிறார்கள், அதே சமயம் தொலைந்து போனவர்களும் குழப்பத்தில் இருப்பவர்களும் கூட இருக்கலாம்.
இந்த உண்மையை எங்கள் கட்சியின் தலைவர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |