தமிழர் தாயக வைத்தியசாலை பெயர் பலகையில் எழுத்து பிழை: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ள மாங்குளம் வைத்தியசாலையின் (base hospital Maankulam) பெயர் பலகையில் உள்ள தமிழ் எழுத்து பிழையை திருத்துமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வட மாகாணத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் மாங்குளம் ஆதர வைத்தியசாலை வளாகத்தை அண்டிய பகுதியிலே அமைக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டினுடைய அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) வருகை தந்து இந்த வைத்தியசாலையை திறந்து வைக்கவுள்ளார்.
தமிழ் மொழி
இதனடிப்படையில், வைத்தியசாலை முன்பாக அமைக்கப்பட்டிருக்கின்ற பெயர் பலகையில் மாங்குளம் (Maankulam) என்பது தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டிருப்பதாகவும் இதனை மாற்றுமாறும் பல தடவைகள் உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இன்றுவரை அது மாற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே திறப்பு விழாக்கு முன்னதாக தமிழ் மொழியினை சரி செய்து பெயர்ப் பலகையினை மாற்றி திறப்பு விழாவினை செய்ய வேண்டுமென ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |