கிளிநொச்சியில் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட 16 சிறுவர்கள் : வெடித்த சர்ச்சை

Sri Lanka Police Kilinochchi Law and Order
By Shalini Balachandran Apr 12, 2025 07:25 AM GMT

கிளிநொச்சியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலை ஒன்றின் சிற்றூழியராக பணியாற்றும் நபரொருவர் விளையாட்டு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில், அவரிடம் விளையாட்டு பயிற்சிக்காக சென்ற சிறுவர்களில் 16 பேரையே அவர் தகாத முறைக்குட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிக்கித் தவிக்கும் பிள்ளையான் : 90 நாள் தடுப்புக்காவல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சிக்கித் தவிக்கும் பிள்ளையான் : 90 நாள் தடுப்புக்காவல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

பாடசாலை நிர்வாகம் 

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பத்து தொடக்கம் 13 வயதுக்குட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இவர்களில் சிலரின் நடத்தைகளில் மாற்றம் மற்றும் கல்வியில் திடீர் பின்னடைவு என்பவற்றின் அடிப்படையில் கவனம் செலுத்திய போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சியில் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட 16 சிறுவர்கள் : வெடித்த சர்ச்சை | Sports Coach Abused 16 Children Kilinochi

இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த பயிற்றுவிப்பாளரால் 16 சிறுவர்கள் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு காவல்துறையினருக்கு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வரலாற்றில் மோசமான சாதனை படைத்த சென்னை அணி - ஏமாற்றம் தந்த தோனி

வரலாற்றில் மோசமான சாதனை படைத்த சென்னை அணி - ஏமாற்றம் தந்த தோனி

 சட்ட நடவடிக்கை

இதன்பின், இன்றைய தினம் (11) கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களுடன் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட 16 சிறுவர்கள் : வெடித்த சர்ச்சை | Sports Coach Abused 16 Children Kilinochi

எனினும், சந்தேக நபரை இதுவரை கைது செய்யாத பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சம்பவம் தொடர்பில் கடந்த புதன்கிழமை பாடசாலைக்கு சென்ற காவல்துறையினர் சிறுவர்களை மாலை நான்கு மணிவரை அறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளதோடு அவர்களை காவல்துறை வாகனத்தில் காவல் நிலையம் ஏற்றிச்செல்ல முற்பட்டுள்ளனர் என பெற்றோர் குறிப்பிட்டுள்ளதோடு காவல்துறையினரோடு முரண்பாடும் ஏற்பட்டுள்ளது.

யாழில் பரிதாபமாக பலியான முதியவர் : 27 வயது இளைஞர் கைது

யாழில் பரிதாபமாக பலியான முதியவர் : 27 வயது இளைஞர் கைது

பாதிக்கப்பட்ட சிறுவர்கள்

இந்நிலையில், தங்கள் பிள்ளைகள் குற்றவாளிகள் அல்ல அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் எனவே அவர்களின் உளவியலை புரிந்து கொண்டு காவல்துறையினர் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதோடு விசாரணைகளுக்காக பிள்ளைகளை தாம் காவல்துறையினர் அழைத்து வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து காவல்துறையினர் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

சிறுவர்களின் உளவியலை பாதிக்கும் வகையில் பெற்றோரை இந்த பிரச்சினையில் தாமாக விலகிக்கொள்ளும் விதமாக காவல்துறையினர் நடவடிக்கைகள் அமைந்துள்ளது என்றும் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட 16 சிறுவர்கள் : வெடித்த சர்ச்சை | Sports Coach Abused 16 Children Kilinochi

குறித்த விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

கிளிநொச்சி காவல் நிலைய பொறுப்பதிகாரியுடன் இன்று (12) தொடர்புகொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே கிளிநொச்சி காவல்நிலைய நிலையப் பொறுப்பதிகாரி மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்கள் கிளிநொச்சி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை சந்தேகநபர் கைது செய்யப்படாமை தொடர்பில் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறுவர்களை தகாதமுறைக்கு உட்படுத்தியமை மிகப்பெரிய சமூக அனர்த்தம் ஆனால் இந்த விடயம் தொடர்பில் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோர் அசமந்த போக்கில் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்றங்களை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றும் : சிறீதரன் சூளுரை

உள்ளூராட்சி மன்றங்களை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றும் : சிறீதரன் சூளுரை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்