உடனடியாக பதவி விலகுங்கள் : விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவு
இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைய தோல்விகளுக்கு இலங்கை கிரிக்கெட் சபையும் தெரிவுக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த தோல்விகளுக்கான பொறுப்பு வீரர்களை விட அதிகாரிகளிடமே உள்ளது என அமைச்சர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
கடும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்
இலங்கை கிரிக்கெட் சபையும், கிரிக்கெட் தேர்வுக் குழுவும் தங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு முன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண வரலாற்றில்
வங்கடே மைதானத்தில் நேற்று (02) நடைபெற்ற உலகக்கிண்ணப் தொடரின் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 302 ஓட்டங்களால் தோல்வியடைந்ததுடன், இலங்கை அணி 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இலங்கை அணி உலகக் கிண்ண வரலாற்றில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.