ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள யாழ் இளைஞன்
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியில் யாழ் இளைஞன் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பிடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் தொடரில் இந்த சீசனிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியிலிருந்து வனிந்து ஹசரங்க விலகுவதாக சிறிலங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே, அந்த வெற்றிடத்திற்கு வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சன்ரைசர்ஸ் அணியில் வியாஸ்காந்த்
சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் உயர் அதிகாரி ஒருவர் வியாஸ்காந்தை இணைத்துக் கொள்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதி, ஓரிரு தினங்களில் கிடைக்கப்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
? ANNOUNCEMENT ?
— SunRisers Hyderabad (@SunRisers) April 9, 2024
Wanindu Hasaranga will be unavailable for the season due to injury. We would like to wish him a speedy recovery.
Sri Lankan spinner Vijayakanth Viyaskanth has joined the squad as his replacement for the rest of #IPL2024. Welcome, Viyaskanth! ✨ pic.twitter.com/A2Z5458dH8
இன்றைய தினம்(9) ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |