ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஐதராபாத் அணி
ஐ.பி.எல் தொடரில் 2-வது தகுதி சுற்று போட்டியில் வென்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதி போட்டியில் விளையாடவுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளத நிலையில் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் சென்னை(Chennai) சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று(24) நடைபெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றி
இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்(sunrisers hyderabad) - வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்(Rajasthan Royals) அணிகள் விளையாடியது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் களமிறங்கிய, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை குவித்தது.
அபார வெற்றி
ராஜஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய டிரென்ட் போல்ட்(Trent Boult) மற்றும் ஆவேஷ் கான்(Avesh Khan) தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் கிஷன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
175 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்சை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றிபெற்றது. எதிர்வரும் மே 26 ஆம் திகதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |