எலிமினேட்டர் சுற்றில் விளையாடிய அணிகள் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளதா!
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று(23) நடைபெற்று முடிந்த நிலையில், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணி கோப்பையை கைப்பற்றியுள்ளதா என கேள்வியெழுந்துள்ளது.
நேற்றையதினம் ராஜஸ்தான் ரோயல்ஸ்(Rajasthan Royals) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(Royal challengers bangalore) அணிகளுக்கிடையிலான எலிமினேட்டர் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
பெங்களூரு அணி
பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்தது.
பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 34 ஓட்டங்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்கள் எடுத்தது.
ராஜஸ்தான் ரோயல்ஸ்
பெங்களூரு அணி சார்பில் சிராஜ் 2 விக்கெட்டுகளும், பெர்குசன், கரண் ஷர்மா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்று முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் மோத உள்ளது.
இந்நிலையில்,முன்பு எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்பு எலிமினேட்டர் சுற்றில் விளையாடிய கொல்கத்தா அணி அதில் ஆர்.சி.பி-யையும், குவாலிபையர் 2 போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியையும் வீழ்த்தியது. இருப்பினும் சென்னை அணியிடம் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது.
எலிமினேட்டர் சுற்று
2016 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் எலிமினேட்டர் சுற்றில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதில் கொல்கத்தாவையும், குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் அணியையும் வீழ்த்தியது.
இறுதிப் போட்டியில் ஆர்.சி.பி-யை வென்று டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கோப்பையை கைப்பற்றியது.
அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மட்டுமே எலிமினேட்டர் சுற்றில் விளையாடி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
மற்ற எந்த அணிகளும் எலிமினேட்டர் சுற்றில் விளையாடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |