கோட்டாபய அரசுக்கு ஏற்பட்ட தோல்வி! முக்கிய தடை நீக்கம்
இரசாயன உரம், பீடை கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் தனியார் துறையினருக்கு இரசாயன உரம், பீடை கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரசாயன உரம், பீடைக்கொல்லி மற்றும் திரவ உரம் என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
சமகால அரசாங்கத்தினால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்ட போதும், தனியார் துறையினரின் அழுத்தம் காரணமாக அதனை நீக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.