சர்வதேச ஒத்துழைப்பை கோரும் பசில்! வரவு-செலவுத்திட்ட உரை நேரலை
சிறிலங்கா நாடாளுமன்றில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
சிறிலங்காவின் 76 ஆவது பாதீட்டை முன்வைத்து, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதீட்டு உரையை ஆரம்பித்துள்ளார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த அவர்,
சுயாதீன நீதித்துறை மற்றும் ஒழுக்கத்தை பேணக்கூடிய அரசாங்கம் இன்று இருக்கிறது. அதனால் நாம் பெருமையடைகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய சக்தி எங்களிடம் இருக்கிறது எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனாவால் மீண்டும் நாடு வழமைக்கு திரும்புவது பாரிய சவால் எனவும் அரச திறைசேரிக்கு ஏற்பட்டுள்ள நட்டம் ரூ. 500 பில்லியனுக்கும் அதிகம் எனவும் தெரிவித்தள்ளார்.
மேலும் உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை இலங்கையும் எதிர்கொள்கின்றது. உணவு தட்டுப்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை இலங்கையும் எதிர்நோக்குகின்றது.
உள்நாட்டில் இதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது. சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் எனவும் பசில் தனது உரையில் தெரிவித்துள்ளார். இதேவேளை சர்வதேச போதைப்பொருள் மாபியாக்களை இலங்கையை உள்ளீர்த்துக்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது அபாயமானதாகும். சர்வதேச போதைபொருளுக்கு அடிமையாவதிலிருந்து மீட்பதற்கு அரச தலைவர், காவல்துறை, இராணுவம் என்பன பாரிய செயற்பாடுகளை முன்னெடுத்தது எனவும் பசில் தனது உரையில் தெரிவித்துள்ளார்.