கோர விபத்து- சம்பவ இடத்தில் பெண் பலி!
accident
police
death
investigation
sri Lanka
By Kalaimathy
மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் மீபே - இங்கிரிய வீதியில் நேற்று மாலை இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மீபே – இங்கிரிய வீதியின் அங்கம்பிட்டிய – உலுகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 50 வயதுடைய பாலிந்தநுவர பிரதேச சபை உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பாதுக்க காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி