ஒருவாரத்தில் பறிக்கப்பட்ட 45 பேரின் உயிர்
srilanka
accident
police
death
By Vasanth
இலங்கையில் கடந்த வாரத்தில் மட்டும் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி 45 பேர் உயிரிழந்துள்ளதுடன் 266 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்வாறு காயமடைந்த 266 பேரில் 94 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கண்டி, கம்பகா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவில் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஜனவரி 31 ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி 6 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 403 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி