அவசர அம்புலன்ஸ் சேவையை நடத்துவதற்கே பணம் இல்லாத சிறிலங்கா அரசாங்கம்!
Parliament of Sri Lanka
Dr Harsha De Silva
Sri Lanka
By Kalaimathy
இலவச அம்பியூலன்ஸ் சேவையான 1990 சுவ செரிய அம்பியூலன்ஸ் சேவையை நடத்தி செல்வதற்கு நிதி ஒதுக்கீடுகளை செய்யுமாறு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவசர நோயாளர் காவு வண்டி சேவையை நடத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தி தனிப்பட்ட முறையீடு ஒன்றை விடுத்தார்.
1990 சுவா செரிய அம்புலன்ஸ் சேவை இலங்கையில் செயற்படுவதற்கு நிதி இல்லாமல் போனதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.
கடந்த நல்லாட்சி காலப் பகுதியில் இந்தியாவின் உதவித் திட்டத்தின் கீழ் 2018ம் ஆண்டு 1990 இலவச அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த இலவச அம்புலன்ஸ் சேவையானது இலங்கையில் 5 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி